often chain snatching in chennai

சென்னை திருமங்கலம் அருகே அடுத்தடுத்து இரண்டு இடங்களில் பெண்களின் கழுத்தில் இருந்த தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து கொண்டு தப்பி சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமங்கலத்தையடுத்த பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவர்இன்று மதியம் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்துதேவி கழுத்தில் இருந்த 6 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து தேவி திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல் திருமங்கலம் நாவலர் நகரைச் சேர்ந்தவர் பானுமதி. இவர் இன்று மதியம் வீடு அருகே கடைக்கு நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த2 பேர் பானுமதி கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து பானுமதி திமுமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.