அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்கவில்லை என்றும், ஓபிஎஸ் நல்லவர் ஆனால் வல்லவர் இல்லை என்றும் புகழேந்தி கூறியுள்ளார். ஓபிஎஸ்-ஐ கொசு என்று உதயகுமார் கூறியதற்கு பதிலளித்த அவர், கொசு கடித்தால் தாங்க முடியாது என்றார்.
அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை சேர்ந்த புகழேந்தி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: எங்கிருந்து ஒன்றிணைப்பது அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி ஒத்துவர மாட்டேங்குறார். முழு முயற்சி எடுத்து விட்டோம். எவ்வளவோ முயன்றும், தற்போது ஆர்.பி.உதயகுமார் தொடங்கி விட்டார். நான் அண்ணன் ஓபிஎஸ்-ஐ விட்டு தூரமாக இருந்தாலும் உதயகுமார் சொல்வது சரியாக இல்லை. சில உண்மைகளை சொல்லி ஆக வேண்டும். ஓபிஎஸ் மிகவும் நல்லவர். ஆனால் வல்லவர் இல்லை. அதனால் தான் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஓபிஎஸ் மீது அம்மா கோபமாக இருந்ததாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை உதயகுமார் வைக்கிறார்.
இதையும் படிங்க: பழனிசாமிக்கு இதே பொழப்பா போச்சு! பாஜகவின் ராஜ விஸ்வாசத்தை காட்டுகிறார்! விடாத அமைச்சர் ரகுபதி!
ஓபிஎஸ்ஐ கொசு என்கிறார். கொசு மிகவும் ஆபத்தானது மலேரியா, டெங்கு போன்றவை கொசுவிலிருந்து தான் வரும். நாங்கள் இல்லாத தைரியத்தில் பேசுகிறார். ஆனால் ஓபிஎஸ் என்கிற கொசு கடித்தால் அவரால் தாங்க முடியாது. அதிமுக ஒற்றுமையாக இல்லாவிட்டால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 26 தொகுதிகள் கூட கிடைக்காது. இரட்டை இலை வழக்கை பார்த்து இபிஎஸ்க்கு பயம். ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டதற்கு நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவருடன் இருப்பவர்களின் பேச்சை கேட்டு அவர் அங்கு சென்று நின்றார். சென்றது தவறு இல்லை அங்கு சென்று ரவீந்திரநாத் போன்றவர்களை நிறுத்தி இருக்கலாம்.
இதையும் படிங்க: இனி தேர்வில் காப்பி அடிக்க முடியாது! மாணவர்களுக்கு செமையா ஸ்கெட்ச் போட்ட தேர்வுகள் இயக்ககம்!
கெட்ட நேரம் இப்படி தான் வரும். சில நேரங்களில் சாமியாரை போலவே இருப்பார். நான் நினைச்சேன் சாமிக்கு ஜால்ரா அடிக்கிறார். என் அப்பா மொழி போராட்டத்திற்கு ஆறு முறை சிறை சென்றார் நான் நினைத்திருந்தால் அம்மாவிடம் பேசி எங்கேயோ போய் இருக்கலாம். ஆனால் நானும் அதற்காக ஆசைப்படவில்லை. ஆனால் இவர்களுக்கு எதற்கு அரசியல்.
மதுரை மண்டலமே தோல்வி அடைந்த உடனே காசு வைத்திருக்கும் மூன்று பேர் தான் ஜெயித்திருக்கிறார்கள். மற்றவர்கள் உயிர் இருக்கும் வரை எங்கள் உடலில் தெம்பு இருக்கும் வரை இந்த கட்சியை காப்பாற்ற கடுமையாக போராடுவோம். பழனிச்சாமி என்கிற சர்வாதிகாரியிடம் இருந்து கட்சியை காப்பாற்ற சிரமமாக உள்ளது. அதேபோல ஓபிஎஸ் மற்றும் சின்னம்மா போன்றவரும் பாஜக மற்றும் தமிழ் மொழியைப் பற்றி பேச வேண்டும். மாநில அரசை மற்றும் பேசிவிட்டு மத்திய அரசை தவிர்ப்பது சரியாக இருக்காது என கூறினார்.
