ஆரோவிலில் முகாமிட்ட என்டிபிசி குழுவினர்: வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடப்பதாக பாராட்டு
ஆரோவில் சர்வதேச நகரைப் பார்வையிட்ட என்.டி.பி.சி குழுவினர், ஆரோவிலில் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தேசிய அனல்மின் கழகத்தின் நிதி இயக்குநர் ஜெயக்குமார் ஸ்ரீவாசன், தெற்கு பிராந்தியம் மற்றும் வர்த்தகப் பிரிவின் நிர்வாக இயக்குநர் அஜய்துவா மற்றும் நாடாளுமன்றக் குழுவினருடன் ஆரோவில் சர்வதேச நகரத்திற்கு கடந்த வெள்ளிக் கிழமை வந்தனர். பின்னர் அவர்கள் ஆரோவில் பகுதியில் அமைந்துள்ள மாத்திர் மந்திர் உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளைச் சென்று பார்வையிட்டனர்.
குடியரசு தின கொடியை ஏற்றிய ஆளுநர் ரவி.! தமிழக அரசின் சாதனை விளக்க ஊர்தியை பார்வையிட்டார்
இதன் தொடர்ச்சியாக ஆரோவில் பகுதியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்ட என்.டி.பி.சி. குழுவினர், பணிகள் சிறப்பாக நடைபெறுவதாகக் கூறி பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் இங்கு வந்ததன் மூலம் ஆரோவில்லின் ஒருங்கிணைந்த தாங்கு தன்மை மற்றும் ஆன்மீக அணுகுமுறைகளை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியது. பல வருடங்களாக ஆரோவில் உருவாக்கியுள்ள புதிய மாதிரிகள் இந்தியாவிலும், அதன் எல்லைக்கு வெளியிலும் உள்ள தனி நபர்கள், நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக என்.டி.பி.சி குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.