Asianet News TamilAsianet News Tamil

Tasmac Shop : 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்... வெளியான அறிவிப்பு- என்ன காரணம் தெரியுமா.?

காத்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் வருகிற 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

Notice of holiday for TASMAC shops in Tiruvannamalai for 3 days KAK
Author
First Published Nov 19, 2023, 7:41 AM IST | Last Updated Nov 19, 2023, 7:46 AM IST

திருவண்ணாமலை தீப திருவிழா

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி  கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஏகன் அநேகன் எனும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் பரணி தீபம் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு 2ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளத்து. இதன் படி  மகா தீபத்திற்கு 7500 பேருக்கும், பரணி தீபத்திற்கு 4000 பேருக்கும் அனுமதி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Notice of holiday for TASMAC shops in Tiruvannamalai for 3 days KAK

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

இதனையடுத்து சட்டம் ஒழுங்கிற்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,. கார்த்திகை தீபத் திருவிழாவைவையொட்டி  திருவண்ணாமலை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.  திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே அமைந்துள்ள அரசு மதுபான கடை, மணலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடை, புறவழிச் சாலையில் அமைந்துள்ள எலைட் அரசு மதுபான கடை இயங்காது என குறிப்பிட்டுள்ளார். 

Notice of holiday for TASMAC shops in Tiruvannamalai for 3 days KAK

3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது

இதேபோல், திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் திரிசூல், ஹோட்டல் நளா ஹோட்டல், அக்ஷிரேயா ஹோட்டல், அம்மாயி, வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி உள்ளிட்ட கடைகள் வருகிற  25 ஆம் தேதி 12 மணி முதல் 27 ஆம் தேதி இரவு 10 மணி வரை ஆகிய  3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

School College Holiday: நவம்பர் 24ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியானது அறிவிப்பு.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios