Not rank for twelves exam by sengottaiyan minister
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் ரேங்க் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
2016-2017-க்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 2ல் தொடங்கி 31 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதன் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் ரேங்க் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது :
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் ரேங்க் கிடையாது.
சி.பி எஸ்.இ முறை போல் மாநில அரசு கடைபிடிக்க உள்ளது.
பொதுத்தேர்வு முடிவுகளில் இனி ரேங்க் முறையில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படாது.
மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 3 மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்படாது.
சிறந்த மாணவர்கள் என்ற சான்றிதழ்கள் வழங்கப்படும்.
சிறந்த மதிப்பெண் வாங்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மாணவர்களின் மன உளைச்சலை தடுக்க புதிய முறை அறிமுகபடுத்தபட்டுள்ளது.
பத்தாம் வகுப்புக்கும் ரேங்க் முறை கிடையாது.
11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
