North state youth have been stabbed hisself repeatedly by bottle

வேலூர்

வேலூரில், கோவிலின் முன்பு அளவுக்கதிமாக குடித்திருந்த வடமாநில இளைஞர் ஒருவர் போதையில் பாட்டிலை உடைத்து தொடர்ந்து பலமுறை தன்னுடைய வயிற்றில் தானே குத்திக் கொண்டதில் அவரது குடல் சரிந்தது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் தீயனைப்பு நிலைய வளாகத்தில் நாகாலம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலுக்கு நேற்று வடமாநில இளைஞர் ஒருவர் வந்தார். கோவிலின் முன்பு வந்த அந்த வடமாநில இளைஞர் திடீரென தனது கையில் வைத்திருந்த பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்திக் கொண்டார்.

பாட்டிலை வயிற்றில் இருந்து எடுத்து தொடர்ந்து பலமுறை தனக்குத் தானே தன்னுடைய வயிற்றில் குத்திக் கொண்டார். இதனால், அவரது குடல் சரிந்தது.

இதனைக் கண்ட அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், மக்கள் மற்றும் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களை உதவி செய்யவிடாமல், அவர்களையும் பாட்டிலால் குத்துவிடுவேன் என்று உடல் மொழியில் மிரட்டினார்.

பின்னர், இதுகுறித்து அரக்கோணம் நகர காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலாளர்கள், அந்த இளைஞரை கீழே தள்ளி, கை மற்றும் கால்களை கட்டி 108 அவசர ஊர்தி மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்திருந்ததால் அந்த வடமாநில இளைஞர் யார்? என்ற விவரத்தை காவலாளர்கள் சேகரிக்க முடியவில்லை. இதுகுறித்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பலமுறை பாட்டிலால் வயிற்றில் குத்திக் கொண்ட இந்த வடமாநில இளைஞரால் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.