பாஜகவை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது: எல்.முருகன் ஆவேசம்!
பாஜகவை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது என எதிர்க்கட்சிகளின் கூட்டம் குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்களை மே 30ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் அக்கட்சி நடத்தி வருகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் வி.பி.தெருவில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் 5 ஆம் இடத்தில் உள்ளது, விரைவில் 3 ஆவது இடத்தை அடையும். இந்த நிதியாண்டில் ரயில்வே பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டிய எல்.முருகன், எதிர்கட்சிகள் பாட்னாவில் ஒன்றிணைந்ததால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. பாஜகவை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது. வரும் மக்களவைத் தேர்தலில் 400 மேற்பட்ட இடங்களில் பாஜகா வெற்றி பெரும் என தெரிவித்தார்.
ஆவணங்களை திருத்த முடியாது... நவீன டெக்னாலஜி - பதிவுத்துறை அதிரடி உத்தரவு!
பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்ற பெற அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. வலுவான பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதன்பொருட்டு, பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த கூட்டத்தில் 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டத்தின் முடிவில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஒன்றாக போராட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.