இந்த ஆண்டு எதிர்ப்பார்த்த அளவிற்கு மழை  இல்லாததால் வரலாறு காணாத அளவிற்கு சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இது தவிர தமிழகம் மற்றும் பல்வேறு வட மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இன்றளவுவும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால், மக்கள்  சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பம்ப் பழுதடைந்ததால் டயாலிஸிஸ் செய்ய தண்ணீர் கிடைக்காமல் 3 நோயாளிகள் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து டயாலிஸிஸ் செய்யப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட நோயாளிகளும் தவித்து வருவதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் டயாலிஸிஸ் பிரிவில் 2 நாட்களாக பழுதடைந்திருந்த தண்ணீர் பம்பு உடனடியாக சரி செய்யப்பட்டு முதற்கட்டமாக தற்போது 13 பேருக்கு டையலைசிஸ் செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்து உள்ளது.