Asianet News TamilAsianet News Tamil

இந்த நாட்களில் பள்ளிகள் கிடையாது.. மீறி வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை.. பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது எனவும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டுமெனவு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No schools on Saturdays and Sundays - School Education Department warning
Author
Tamilnádu, First Published Jul 29, 2022, 12:16 PM IST

பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது எனவும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டுமெனவு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கு.. கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

 தமிழகத்தில்‌ கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன்‌ மாதம்‌ 13 ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில்‌ வகுப்புகள்‌ தொடங்கப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு‌ பிறகு வழக்கம் போல் பள்ளிகள் இயங்குகின்றன. மேலும் 11 ஆம் வகுப்பிற்கு ஜூன் 27 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் இந்த கல்வியாண்டு முழுவதும் சனிக்கிழமை வகுப்புகள்‌ இயங்காது, விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்‌ துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மேலும் படிக்க:தமிழகத்தில் 2 வாரத்தில் 5 மாணவர்கள் தற்கொலை..! தலையில் அடித்து கதறும் ராமதாஸ்

ஆனால் சில தனியார் பள்ளிகளில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் தற்போது பள்ளிக்கல்வித்‌ துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்‌ மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது, மீறினால்‌ கடும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று எச்சரித்துள்ளது.
விடுமுறை நாள்களில்‌ மாணவர்களுக்கு வகுப்புகள்‌ எடுக்க கூடாது, பள்ளி வேலை நாட்களில்‌ மட்டுமே மாணவர்கள்‌ வர வேண்டும்‌ என்று உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios