தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தல்களில் தபால் வாக்குகள் கிடையாது என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது பணப்பட்டுவாடா காரணமாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் சட்டசபைத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து 3 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் தபால் வாக்குகள் கிடையாது என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.