வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன்- மணிமொழி தம்பதியரின் மூத்த மகள்  சிநேகா. இவருக்கு பெற்றோர்கள் ,  காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் உயிர் நீத்த போராளி சிநேகலதா நினைவாக சிநேகா என பெயரிட்டனர்.  தனது அம்மாவின் முதல் எழுத்தை முதலிலும், அடுத்தது அப்பாவின் முதல் எழுத்து என ம.ஆ.சிநேகா என அவருக்கு பெற்றோர் பெயரிட்டனர்.

சிநேகா முதல் வகுப்பு சேர்க்கையில் தான் பள்ளி நிர்வாகம்  முதலில் அவரிடம் என்ன சாதி என்று கேட்டது. எங்களுக்கு  சாதி இல்லை என்று என் பெற்றோர் சொல்ல, மதத்தையாவது சொல்லுங்கள் என்றனர். மதமும் இல்லை என்றனர் பெற்றோர்.

இப்படி தான் தொடங்கியது சிநேகாவின்  முதல் பிரச்சாரம்.... பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் சாதி மதம் குறிப்பிட்டதில்லை. சாதி சான்றிதழும் அவருக்க இல்லை. இதே போல் சிநேகாவின் தங்கைகள் மும்தாஜ் சூரியா, ஜெனிபர் ஆகியோருக்கும் பள்ளி சான்றிதழில் சாதி, மதம் குறிப்பிடப்படவில்லை. சாதி குறிப்டிடாமலேயே படித்து தற்போது அவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

அதே போல் சிநேகாவின்  கணவர் கி.பார்த்திபராஜா உடனான திருமணம் சாதி, மத சடங்குகள் அற்ற தாலி போன்ற சாதிய அடையாளங்கள் அற்ற புரட்சிகர விழாவாக நடந்தது.. 

அவர்களது குழந்டிதகளுக்கு ஆதிரை நஸ்ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி என பெயரிட்டு தங்கள் மகள்களை சாதி மத அடையாளங்கள் இன்றி வளர்த்து வருகிறார். ஆனால் இது வே அவர்களை சமுதாயத்திலிருந்து அந்நியணப்படுத்தியது. அவர்ககள் யாருக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.


இந்நிலையில்தான் சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி மதம் அற்றவர் என்ற தங்கள் வாழ்விற்கு ஒரு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து அதற்காக முயற்சி செய்தார்.
 
பல முயற்சிகளுக்குப் பிறகு சிநேகாவுக்கு சாதி இல்லை மதம் இல்லை என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது. இது தனக்கு பெருமை அளிப்பதாக சிநேகா தெரிவித்துள்ளார்.

இந்த புரட்சிகரமான சான்றிதழை அளிக்க பரிந்துரை செய்த திருப்பத்தூர் சார் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் சான்றளித்த திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி மற்றும் அனைத்து விதங்களிலும் பேருதவியாக இருந்த தோழர் அறவேந்தன்  ஆகியோருக்கு சிநேகா நன்றி தெரிவித்துள்ளார்.


மேலும் வேலூர் மாவட்டத்தில் இருந்து இந்தப் புரட்சி தொடங்கியிருப்பது தனக்க பெருமை அளிப்பதாகவம சிநேகா தெரிவித்துள்ளார். இநநிலையில் சிநேகாவுக்கு பாராட்டுக்ள் குவிந்து வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சிநேகாவைப் பாராட்டியுள்ளார்.