தொடர்ந்து ஐந்து நாட்களாக தொற்று பாதிப்பு பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளதால், கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ஐந்து நாட்களாக தொற்று பாதிப்பு பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளதால், கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று பாதிப்பு பதிவாகவில்லை. மேலும் கொரோனா சிகிச்சையில் யாரும் இல்லை . மேலும் கொரோனா உயிரிழப்பும் பூஜ்ஜியமாகவே உள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 12 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. ஆனால் பரிசோதனை மேற்கொண்ட அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளதால், புதிதாக தொற்று பாதிப்பு பதிவாகவில்லை. தொடர்ந்து 5 வது நாளகாக கொரோனா இல்லதாக மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது.

இதையடுத்து புதுச்சேரியில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,65,774 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,962 ஆகவும் மாறாமல் உள்ளது. நாட்டில் இதுவரை 16,46,267 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தற்போது கொரோனா தொற்று இல்லாத போதிலும், மக்களின் பாதுகாப்பை குறைக்க கூடாது என்பதால் முக கவசம் அணிதல், சமூக விலகல் மற்றும் கைகளை கழுவுதல் ஆகியவை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.