நிர்மலாதேவி வாக்குமூலம் என நாளேடுகளில் வந்த செய்தி தவறான என்றும் நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் உதவி பேராசிரியர் முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். 

 சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கும் வகையில் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில், கல்லூரி பேராசிரியை ஒருவர், தனது கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பதும், அதற்கு மாணவிகள் மறுப்பு தெரிவிப்பதும் என அவர்கள் உரையாடும் அந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆடியோவில் பேசியிருந்தவர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியைச் சேர்ந்த கணித பேராசிரியை நிர்மலா தேவி. 

இந்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, நிர்மலா தேவி கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நிர்மலா தேவி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். நிர்மலாதேவி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் செய்தி தாளில் வெளியானது. அதில், உதவி பேராசிரியர் முருகன் மீது குற்றம் சாட்டி இருந்தார். 

அவரது வாக்குமூலத்தில், மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், என் வீட்டுக்கு வந்தபோது, என்னுடன் இரு முறை உறவு கொண்டார். எனது மகள் ஆல்பத்தை பார்த்துவிட்டு அவர் வருவாரா? என கேட்டார். அதற்கு நான் அவர் இதற்கெல்லாம் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றேன். உடனே கல்லூரி மாணவிகளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டார். நானும் பார்ப்பதாக கூறினேன். இதனிடையே இவருடைய அறிமுகத்தின்பேரில் கருப்பசாமியுடனும் உல்லாசம் அனுபவித்தேன். 

முருகன், கருப்பசாமி சேர்ந்துதான் கல்லூரி மாணவிகளை ஏற்பாடு செய்ய வேண்டும என்று கேட்டனர் என்று நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்திருந்தார். நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் முற்றிலும் தவறானது என்று பேராசிரியர் முருகன் மறுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது உதவி பேராசிரியர் முருகன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினார். 

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மலாதேவி வாக்குமூலம் என நாளேடுகளில் வந்த செய்தி தவறானது என்று மறுத்துள்ளார். இது தொடர்பான வழக்கை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் என்றும் நான் எந்த தவறும் செய்யவில்லை முருகன் கூறினார்.