School Holiday: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருவதும் மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வந்தது. இதன் காரணமாக பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 

Nilgiris district Heavy Rain...Schools Holiday tvk

தொடர் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களில்  உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருவதும் மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வந்தது. இதன் காரணமாக பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க: School Colleges Holiday: ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இதையும் படிங்க:  கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்! திருப்பூர், தேனி, உள்ளிட்ட இந்த 6 மாவட்டங்களில் இன்று சம்பவம் இருக்காம்!

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்கள் வேறொடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லஷ்மி பவியா அறிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios