- Home
- Gallery
- School Colleges Holiday: ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!
School Colleges Holiday: ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!
தூய பனிமய மாதா பேராலய விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Panimaya Matha Church Festival 2024
உலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கோலாகலமாக 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்கள் இலங்கை, உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
School Holiday
அந்த வகையில் தூத்துக்குடியில் இந்த ஆண்டு 442வது ஆண்டு பனிமயமாதா பேராலய திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், 10ம் நாளான வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School College Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஜூலை 29ம் விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!
Thoothukudi district collector Lakshmipathy
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்! திருப்பூர், தேனி, உள்ளிட்ட இந்த 6 மாவட்டங்களில் இன்று சம்பவம் இருக்காம்!
School Working Day
இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட்10ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.