#Breaking : Night Curfew: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு… புதிய கட்டுபாடுகளை விதித்தது தமிழக அரசு!!

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

night curfew in tamilnadu from tomorrow

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு பின்னர் சற்று குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 35 ஆயிரம் பேருக்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொரோனா படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த வாரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 600 என்ற அளவுக்கு இருந்தது. இதனால், பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில், கொரோனா வைரஸ் உருமாறி ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகர பகுதிகளில் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது, தனியார் பேருந்து சேவைகளுக்கு அனுமதி, பால் வினியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்பட அனுமதி.

night curfew in tamilnadu from tomorrow

 

 

பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம். மையங்கள் செயல்பட அனுமதி, ஐ.டி.நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி, வருகிற 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து, அனைத்து கல்வி நிலையங்களிலும் ஆன்லைன் மூலம் மட்டும் வகுப்புகள் நடத்த வேண்டும், கடைகளுக்கு நாளை முதல் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது, அனைத்து கடைகளும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறக்கலாம், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை முழுமையாக மூட உத்தரவு, தமிழகத்தில் கேளிக்கை பூங்காக்கள், பொழுது போக்கு பூங்காக்களை மூட உத்தரவு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடு, பார்வையாளர்கள் இன்றி போட்டிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் இரவு நேர பணிக்கு செல்லும் போது அலுவலக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழ்களையும் பணியாளர்கள் வைத்திருக்க வேண்டும். பயிற்சி நிலையங்கள் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்குத் தடை. பிளே ஸ்கூல், எல்கேஜி, யூகேஜி உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் செயல்பட தடை. பொதுத்தேர்வுகளுக்கு செல்லும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடரும். பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை. கடற்கரைகளில் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி. தமிழ்நாடு முழுவதும், அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி. அரசு மற்றும் தனியார் சார்பில் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும், அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி. மீன், காய்கறிச் சந்தைகள், வார இறுதி நாட்களில் ஒரே இடத்தில் செயல்பட தடை. மீன், காய்கறிச் சந்தைகள், வார இறுதி நாட்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்க உத்தரவு. திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதி. திரையரங்குகளில் பணியாற்றும் பணியாளர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

night curfew in tamilnadu from tomorrow

கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள், உரிமையார்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பொது பேருந்துகள், ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50% பயணிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பொங்கல் & கலை விழாக்கள் ஒத்திவைப்பு, அரசு மற்றும் தனியார் சார்பில் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது, அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திய சான்றிதழை தங்கள் அலுவலகங்கள் சமர்பிக்க வேண்டும். கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் .திரையரங்குகள், வணிக வளாகங்கள்(Malls) உள்ளிட்ட அனைத்து சேவை துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம். அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திய சான்றிதழை தங்கள் அலுவலகங்கள் சமர்பிக்க வேண்டும். கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். திரையரங்குகள், வணிக வளாகங்கள்(Malls) உள்ளிட்ட அனைத்து சேவை துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம். உணவகங்கள், பேக்கரிகள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. உணவகங்கள், பேக்கரிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து உண்பதற்கு அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios