Asianet News TamilAsianet News Tamil

ஜிஹாதி படுகொலைகள் அனைவரையும் அதிர செய்கிறது - இந்து முன்னணி தலைவர் அறிக்கை

ஜிஹாதி படுகொலைகள் அனைவரையும் அச்சுறுத்தும் நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் பொறுப்பில் இருந்த அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

NIA should investigate all those who were in charge in the PFI organization says hindu munnani president kadeswara subramaniam
Author
First Published Jul 25, 2023, 6:39 PM IST

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தேசிய புலனாய்வு முகமை சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பயங்கரவாதிகள் தொடர்பான பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மதமாற்ற பிரசாரத்தை தட்டி கேட்ட திருபுவனம் பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக பல இடங்களில் NIA விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது திட்டமிடப்பட்ட ஜிஹாதிக் கொலை என்றும் ஆடிட்டர் ரமேஷ் , இந்துமுன்னணி மாநிலச் செயல்லாளர் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட விதத்திலேயே திருபுவனம் ராமலிங்கம் அவர்கள் படுகொலை நடைபெற்றுள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அடையச் செய்கிறது.

இதுபோன்ற ஜிஹாதி படுகொலைகள் குறித்த ஆவணப் படத்தை இந்துமுன்னணி கடந்த 2018 ம் ஆண்டே வெளியிட்டது. அதில் இதுபோன்ற கொடூர செயல்களைக் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் நிர்வாகிகள், எஸ்டிபிஐ (SDPI) போன்ற பல்வேறு முகங்களில் தங்களது தேசவிரோத வேலைகளில் தொடர்ந்து வருவதாக செய்திகள் வெளியாகிறது. 

பொள்ளாச்சியில் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் சிக்கி கை துண்டான நிலையில் உயிரிழப்பு

இது இந்திய தேசியத்தின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியதாகும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டாலும் அதன் நிர்வாகிகள் பல்வேறு அமைப்புகளின் பின்னணியில் ஒளிந்து கொண்டு வேலை செய்து வருகின்றனர். எனவே தடை செய்யப்பட்ட அமைப்பில் பொறுப்பில் இருந்த அனைவரையும் விசாரித்து அவர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்து அவர்கள் அனைவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டால் மட்டுமே பயங்கரவாத செயல்களை முற்றிலுமாக தடுக்க முடியும். இல்லையெனில் அவர்கள் பல்வேறு  முகமூடிகளில் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு வழக்கம்போல் தங்களுடைய பயங்கரவாத செயல்களை தொடரக்கூடும்.

அதேபோல திண்டுக்கல்லில் அல்ஆசிக் என்ற பயங்கரவாதி திமுக பிரமுகரை வெட்டிப்படுகொலை செய்துள்ளார். இதுபோல் பயங்கரவாதிகளின் கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முன்பு ஜிஹாதி முறையில் நடைபெற்ற படுகொலைகள் அனைத்தையும்  NIA விசாரிக்க வேண்டும்.

தமிழகத்தில் இத்தகையப் படுகொலைகளைச் செய்துவிட்டு இன்று வரை கைது செய்யப்படாமல் பயங்கரவாதிகள் வெளியே திரிந்து கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக தங்க முத்துக் கிருஷ்ணன் வழக்கில் அபூபக்கர் சித்திக், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் டைலர் ராஜா, திருபுவனம் ராமலிங்கம் வழக்கில் 6 பேர், வெள்ளையப்பன் வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் போன்றவர்கள் கைது செய்யப்படவில்லை.

தேனாறும், பாலாறும் தேவையில்லை; வெள்ள ஆறு ஓடாமல் இருந்தாலே போதும் - அதிமுக எம்எல்ஏ குமுறல்

ராமலிங்கம் கொலை வழக்கு குற்றவாளிகள் குறித்த துப்புக் கொடுத்தால் சன்மானம் வழங்க NIA கூறியுள்ளதுபோல மற்ற வழக்குகளில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகளைப் பற்றிய குறிப்பு தருபவர்களுக்கும் சன்மானம் வழங்க அறிவிக்க வேண்டும். அதேபோல ஜிஹாதி முறையில் கொல்லபட்டவர்களின் குடும்பத்தினருக்கும், பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்குவது போல நிவாரணம், சலுகைகள் வழங்க வேண்டும்.

இந்த நேரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடந்து துணிந்து மேற்கொண்டு வரும் NIA அமைப்புக்கு இந்துமுன்னணி தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் பொறுப்பில் இருந்த அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தால் மட்டுமே தமிழகத்தில் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த முடியும் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios