NIA RAID : தமிழகத்தில் மீண்டும் களம் இறங்கிய என்.ஐ.ஏ.! எத்தனை இடங்களில் ஆய்வு.? திடீர் சோதனைக்கு காரணம் என்ன.?

தீவிரவாத சம்பவங்களை தடுக்கும் வகையில் சென்னை,கும்பகோணம்,திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

NIA raids houses of supporters of banned movement at various places in Tamil Nadu kak

தமிழகத்தில் என்ஐஏ ரெய்டு

தமிழகத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறைய தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் தொடர்ந்து கண்காணித்து வரும் என்ஐஏ இன்று காலை முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களை குறிவைத்து களம் இறங்கியுள்ளது. ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்க ஆதரவாளர்கள் வீடுகளில் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த வகையில், சென்னை, தஞ்சாவூர், ஈரோடு,புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் என் ஐ ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

Annamalai : ஏழை எளிய மக்களின் உயிர் என்றால் திமுகவுக்கு அத்தனை இளக்காரமாகி விட்டதா? சீறும் அண்ணாமலை

சோதனைக்கு காரணம் என்ன.?

  ஈரோடு பகுதியில் ஜேசிஸ் ஸ்கூல் அருகில்  ஷர்புதீன் என்பவர் வீட்டில் கொச்சி NIA ஆய்வாளர் விஜி என்பவர் தலைமையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீடு,  சென்னையில்  முகமது இஷாக் என்பவர் வீட்டில் சென்னை NIA ஆய்வாளர் அமுதா என்பவர் தலைமையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. என்ஐஏ அதிகாரிகளின் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு பிறகே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. 

சிறுவன் பலி... குடிநீரை கூட இந்த அரசால் சுகாதாரமாக வழங்க முடியவில்லையே.! புரையோடிய நிர்வாகம் -விளாசும் இபிஎஸ்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios