JN1 Covid Variant: தமிழகத்தில் 4 நகரங்களில் புதிய வகை கொரோனா.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ’JN1’ புதிய கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திருச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 4 நகரங்களில் ’JN1’ வகை புதிய கொரோனா பாதிப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடியது. இதில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் புதிய கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா, கேரளாவில் முதல்முறையாக கண்டறியப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ’JN1’ புதிய கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- வேகமெடுக்கும் JN.1 வகை கொரொனா.. இனி இதை எல்லாம் ஃபாலோ பண்ணனும்.. கர்நாடக அரசு புதிய உத்தரவு..
இந்நிலையில் தமிழ்நாட்டில் இணை நோய் காரணமாக சிகிச்சைக்கு வந்தவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில், 4 பேருக்கும் புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அந்த 4 பேரும் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் என வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா வீரியம் குறைந்தது எனவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.