சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக மூன்று நீதிபதிகள் நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சேஷாத்ரி, டீக்கா ராமன், சதிஷ் குமார் ஆகியோர் சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக நியமிக்கபடுகின்றனர்.
இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 54 இல் இருந்து 57 ஆக உயர்கிறது. மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆகும் இன்னும் 18 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.
