சென்னை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.விஸ்வநாதன், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சீமா அகர்வால். குற்ற ஆவண காப்பகத்தில் ஏடிஜிபியாக பணியாற்றி வருகிறார்.

பிஏ, எம்எல், பிஎச்டி முடித்துள்ள கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சிபிஐயில் எஸ்பி, டிஐஜியாக பணியாற்றியுள்ளார். சென்னை உளவுத்துறையில் எஸ்பி, டிஐஜியாக பணியாற்றினார்.

சென்னையில் போக்குவரத்து துணை கமிஷனர் மற்றும் இணை கமிஷனராகவும், கோவை நகர கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது சென்னைக்கு கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளிநாடு சென்றுள்ள ஏ.கே.விஸ்வநாதன், நாடு திரும்பியவுடன், சென்னை நகரின் புதிய கமிஷனராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. ஆனால், அதுவரை இந்த பணியை யார் கவனிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.