Asianet News TamilAsianet News Tamil

நெல்லை சாதி வெறியாட்டம்! சிறுநீர் கழித்து இழிவுப்படுத்திய அநாகரிகம்: திருமா கடும் கண்டனம்

குற்றவாளிகளைப் பிணையில் வெளிவிடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

Nellai caste fanaticism! Thirumavalavan strongly condemns disgraceful indecent urination act sgb
Author
First Published Nov 3, 2023, 12:02 AM IST | Last Updated Nov 3, 2023, 12:07 AM IST

நெல்லை அருகே இளைஞர்கள் இருவரைத் தாக்கி அவர்கள் மீது சிறுநீர் கழித்து இழிவுப்படுத்திய அநாகரிகமான சாதி வெறியாட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீசுவரம் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் இருவர் சாதிவெறிக் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள் மீது சிறுநீர் கழித்து இழிவுப்படுத்தியுள்ளனர். இந்த அநாகரிகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் ஜாதி வன்கொடுமை: நெல்லை சம்பவம் பற்றி அண்ணாமலை அறிக்கை

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாகவும் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

"சாதிவெறி கொண்ட அந்தச் சமூகவிரோதக் கும்பல் இரவு ஏழு மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரையில் அவ்விளைஞர்கள்  இருவரையும் நிர்வாணப்படுத்தி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்து அலைபேசிகள், இருசக்கர வண்டி மற்றும் பணமெடுக்கும் ஏடிஎம் அட்டை போன்றவற்றைப் பறித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆடையில்லாமலேயே அவர்கள் அங்கிருந்து தப்பித்து வீடுவந்து சேர்ந்துள்ளனர். அதன்பின்னரே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து காவல்துறையினர் சாதிவெறிக் கும்பலை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

"அதேவேளையில், குற்றவாளிகளைப் பிணையில் வெளிவிடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது" என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

இளைஞரைச் சுத்தியலால் அடித்துக் கொன்ற சகோதர்! ரூ.1.9 கோடி பணத்துக்காக சதித் திட்டம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios