திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த கரும்புளியூத்தில் தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற காரும், நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இந்த சம்பவத்தில், காரில் இருந்த கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  வா மீது லாரி மோதியதும் உடனடியாக லாரி டிரைவர் அங்கிருந்து  தப்பியோடினார். 

தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அந்த காரில் வந்தவர்கள் யார்? . எங்கு செல்கிறார்கள் ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.