neet Students Im ready to help Arulinthi is the same 9894777077

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களில் பயணச் செலவு உணவு மற்றும் தாங்கும் இடத்தை ஏற்பதாக நடிகர் பிரசன்னா, அருள்நிதி தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவ, மாணவியருக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. வசதி உள்ளவர்கள் செல்வார்கள் இல்லாத ஏழை பிள்ளைகள் எப்படி பயணம் செய்வது என்று தெரியாமல் திணறி வருவதால் முன்னணி நடிகர்கள் அரசியல் தலைவர்கள் என ஆளாளுக்கு மாணவர்களுக்கு செலவு செய்ய முன்வந்துள்ளனர்.

இன்று ட்வீட் போட்ட தினகரன், கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தங்குமிட வசதியும், தேர்வு மையத்தை சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கேரளாவிற்று தேர்வெழுத செல்லும் மாணவர்களுக்கு உதவுவதாக அறிக்கை விட்டார்.

இதனையடுத்து, நடிகர் பிரசன்னா இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் அல்லது வசதி இல்லாத மாணவர்களில் குறைந்தது 2 பேரின் பயண செலவை ஏற்க விரும்புகிறேன். ஹால் டிக்கெட், தேர்வு மைய விபரங்களை எனக்கு இன்பாக்ஸ் செய்யுங்கள், உங்களுக்கு டிக்கெட் புக் செய்கிறேன் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நீட் தேர்வு எழுத்தும் மாணவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் நடிகருமான அருள்நிதி போக்குவரத்து, தாங்கும் இடம் மற்றும் உணவு என மாணவர்களுக்கு உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் 9894777077 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல, நீட் தேர்வு எழுதுவோருக்கு உதவ ஜெய்பூரில் உள்ள ராஜஸ்தான் தமிழ் சங்கம் முன்வந்துள்ளது. போக்குவரத்து, உணவு, இருக்கும் இடம் என அனைத்துக்கும் உதவுகிறது. ராஜஸ்தான் செல்லும் மாணவர்கள் இவர்களை தொடர்பு கொள்ளவும் என வாசுகி பாஸ்கர் ட்வீட்டியுள்ளார்.

உதவி வேண்டுவோர் இவர்களை அணுகலாம்

முருகானந்தம் 9790783187

சவுந்தரவள்ளி 8696922117

பாரதி 7357023549 இந்த எண்ணிற்கு தொடர்புகொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.