நீட் தேர்வில் நிரந்தர தீர்வு கிடைக்காது - பொன்னார் பேட்டி

நீட் தேர்வில் நிரந்தர தீர்வு கிடைக்காது என்றும், நீட் தேர்வில் நிரந்தர தீர்வு ஏற்பட்டால் தமிழக மாணவர்களின் அழிவுக்கு வழி வகுக்கும் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை - கன்னியாகுமரி 4 வழி சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில், செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போதுபேசிய அவர்,

தமிழகத்தில் ரயில்பாதை மேம்பாட்டுக்காக மொத்தம் ரூ,3,940 கோடிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 348.56  கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்படும்.

மதுரை - வாஞ்சி மணியாச்சி இரட்டை ரயில் பாதைக்கு ரூ.1,872 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை - கன்னியாகுமரி இடையே 4 வழி சாலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தை மேம்படுத்த புதிய ரயில் பாதைகள் உதவும்.

ரூ.10,000 கோடி திட்டத்திற்கு தமிழக அரசின் முழுமையான ஒப்புதல் கிடைக்கவில்லை. திருவனந்தபுரத்தில் இருந்து நீர்வழி போக்குவரத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிரண்டு மாதத்தில் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்படும். பல்வேறு சாலை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகத்துக்கு ரயில்வே துறைக்கான நிதி ரூ.1.563 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டம் இது. தமிழக அரசு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தரமான உணவு ரயில்களில் வழங்கப்படுகிறது.

நீட் தேர்வில் நிரந்தர தீர்வு கிடைக்காது. நீட் தேர்வில் நிரந்தர தீர்வு ஏற்பட்டால் தமிழக மாணவர்களின் அழிவுக்கு வழி வகுக்கும். இவ்வாறு கூறினார்.