வசூல்ராஜா MBBS பட பாணியில் தேர்வில் முறைகேடு நடக்கக்கூடாது என்பதாலேயே மாணவர்களிடம் கடுமையான சோதனை நடத்தப்பட்டதாக நீட் தேர்வு மையங்களில் சோதனை செய்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கடந்த 7-ம் தேதி நடந்தது. சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்வை எழுத வந்த மாணவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் கடுமை யான சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். 

தேர்வு எழுத முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டையை அரைக்கை அளவுக்கு வெட்டி அனுப்பினர். மாணவிகள் அணிந் திருந்த முக்கால் கை குர்த்தாவும் கிழிக்கப்பட்டது. மாணவிகள் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல், தலையில் இருந்த ஹேர்பின் போன்றவைகள் அகற்றப்பட்டன. 

இதைவிட கொடுமையான ஒரு கெடுபிடி கேரள மாநிலம் கண்ணூர் என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்றில் தேர்வு எழுத வந்த மாணவி யின் உள்ளாடையில் உலோக கொக்கி இருந்ததால், உள்ளாடையை அகற்ற சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு நடந்த இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடுமையான கெடுபிடி குறித்து நீட் தேர்வு மையங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் கூறியதாவது; சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவுறுத் தலின்படிதான் நாங்கள் மாணவர் களிடம் சோதனை நடத்தினோம். தேர்வில் காப்பி அடிக்க புத் தகங்கள், துண்டு சீட்டுகளை மறைத்து எடுத்து வந்திருப்பார்கள் என்று சோதனை செய்யவில்லை. 

இது மட்டுமல்ல மாணவர்கள் புளூடூத், கேமரா, மைக்குகள் போன்ற அதிநவீன சாத னங்கள் மூலமாக தேர்வின்போது வெளியே உள்ளவர்களின் உதவியுடன் தேர்வை எழுத முடியும்.

மூக்குத்தி, கம்மல், பட்டன் போன்றவற்றில் அந்த சிறிய அள விலான புளூடூத், கேமரா, மைக்கை எளிதாக பொருத்தி மறைத்து வைக்க முடியும். அதற்கான டிவை சர் கருவியை உள்ளாடைகளில் பொருத்தலாம். அந்த கேமரா மூலம் வெளியே இருப்பவர்கள் கேள்வித் தாளை பார்த்து பதில்களை சொல்ல தேர்வு எழுதும் மாணவர்கள் காதுக்குள் மறைத்து வைத்துள்ள சிறிய புளூடூத் கருவி மூலமாக கேட்டு குறிக்கலாம். அதனால்தான் மூக்குத்தி, கம்மல், பெரிய அளவிலான பட்டன் போன்றவை அகற்றப்பட்டன. உள்ளாடைகளும் சோதனை செய்யப்பட்டது.

‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ கமல்ஹாசன் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வின் போது புளூடூத் ஹெட் செட் மூலமாக வெளியில் உள்ள மற்றொருவரின் உதவியுடன் தேர்வு எழுதுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும்.

அந்த திரைப் பட பாணியில் சென்னையில் எம்பிபிஎஸ் தேர்வின்போது வெளியில் உள்ளவர்களின் உதவியுடன் தேர்வு எழுதிய மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். அப்படி எந்த சம்பவமும் நடந்துவிட கூடாது என்பதற்காக இந்த கெடுபிடிகள் நடந்ததாக சோதனையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இதையடுத்து அந்த மாணவர்களின் தேர்வு முடிவை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது. மாணவர்களும் நீதிமன்றம் வரை சென்றனர்.