Natarajan was hospitalized with a liver and kidney transplants Operation sucess at Global Hospital

புதிய பார்வை ஆசிரியரும். சசிகலா கணவருமான நடராஜனுக்கு குளோபல் மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையிலுள்ள கிளனேஜல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் நடராஜன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செப்டம்பர் 25ஆம் தேதி மருத்துவ அறிக்கையில் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து நேற்று மருத்துவமனையின் கல்லீரல் பிரிவின் இயக்குநர் டாக்டர் இளங்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடராஜன் உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளதாக கூறப்பட்டது. அவரது சிறுநீரகமும், கல்லீரலும் செயல் இழந்து விட்டது. அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.

உயர் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நடராஜன் காத்திருந்தார். இதனையடுத்து அவருக்கு உறவினர் ஒருவரின் கல்லீரல் நடராஜனுக்கு பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நடராஜனுக்கு குளோபல் மருத்துவமனையில் இன்று காலை கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. நலமாக உள்ளார்.