BJP vs NTK : சர்க்கஸில் கோமாளிகள் போல, திரைப்படங்களில் காமெடியன்கள் போல, அரசியலில் சீமான் - நாராயணன் திருப்பதி

சீரியஸான சூழ்நிலை உள்ள போது சீமான் பேச்சை கேட்டால் டென்க்ஷன் காணாமல் போகும். தமிழக அரசியல்வாதிகளின் பொழுது போக்கே சீமான் தான்.  கட்சியை கலைப்பதாக கூறும் சீமான் தனது முடிவு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 
 

Narayanan Tirupati has urged Seeman to reconsider his decision to dissolve the party KAK

தமிழகத்தில் பாஜக

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் 4முனை போட்டி ஏற்பட்டது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என்ற  போட்டி உருவானது. இதில் மற்ற கட்சிகளை விட நாம் தமிழர் கட்சி மட்டும் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை எதிர்கொண்டது. இந்தநிலையில்,  தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாகவும், தமிழகத்தில் 3-ஆவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என அண்ணாமலை கூறியிருக்கிறாா். மேலும் அதிமுகவின் இடத்தை பாஜக நிரப்பி வருவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலில் அவா் தனித்துநின்று போட்டியிட்டு காட்டட்டும். 

பதற்றத்திலும், தோல்வி பயத்திலும் மோடி... ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருந்தால் தவறு இல்லை- திருமாவளவன் அதிரடி

கட்சியை கலைக்க தயார்

தேர்தலில் எந்த வித கூட்டணியின்றி போட்டியிட சொல்லுங்கள். அப்போது நாம் தமிழர் கட்சியை விட கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தல் நான் எனது கட்சியை கலைத்துவிடுகிறேன் என சீமான் ஆவேசமாக தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக மாநில துணை தலைவர் நாரயாணன் திருப்பதி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், என் கட்சியை விட பாஜக அதிக ஓட்டு பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விடுகிறேன் " : சீமான். 


முடிவு மறுபரிசீலனை செய்யட்டும்

சர்க்கஸில் கோமாளிகள் போல, திரைப்படங்களில் காமெடியன்கள் போல, அரசியலில் சீமான் அவர்கள். சீரியஸான சூழ்நிலை உள்ள போது சீமான் பேச்சை கேட்டால் டென்க்ஷன் காணாமல் போகும். தமிழக அரசியல்வாதிகளின் பொழுது போக்கே சீமான் தான்.  முடிவை சீமான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி கிண்டல் செய்துள்ளார்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios