DMK MLA Ponnusamy passes away :  சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கே. பொன்னுசாமி (70) மாரடைப்பால் காலமானார். இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Senthamangalam MLA K Ponnusamy death : தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் (SC) சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே. பொன்னுசாமி அவர் திராவிட முன்னேற்றக் கழகம் உறுப்பினராகவும் இருந்தார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ச. சந்திரனை 10,493 வாக்குகள் வித்திசாயத்தில் வென்றார்.

திமுக எம்எல்ஏ திடீர் மரணம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருப்பவர் பொன்னுசாமி (70) இவர் இன்று அதிகாலை வீட்டில் இருக்கும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை கொல்லிமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு எம்எல்ஏ பொன்னுசாமி உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ

எம்.எல்.ஏ பொன்னுசாமி உயிரிழந்த சம்பவம் கட்சியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2006 -ம் ஆண்டு தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன்னுசாமி கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையிலும் பொன்னுசாமிக்கு 2021 ல் சேந்தமங்கலமத்தில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.