21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நாகை எம்.பி. செல்வராஜ் உடல் நல்லடக்கம்!

நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

Nagapatinam MP selvaraj buried with govt respect 21 gunshots smp

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினர் செல்வராஜ், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 3ஆம் தேதி சென்னை கிண்டி அருகே மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாள்பட்ட சிறுநீரக பிரச்சினை மற்றும் இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் நேற்று அதிகாலை 2.40 மணிக்கு காலமானார். அவரது உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள சித்தமல்லி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு: தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு!

அதன்படி, நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றன. திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி யில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்ட நிலையில். அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வுகளில் ஊர் பொதுமக்கள், மூத்த அரசியல்வாதிகள், ஏராளமான கம்யூனிஸ்ட் தோழர்கள் கலந்து கொண்டனர்.

  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios