NAAM THAMIZHAT PARTY GOT MORE VOTES THAN BJP

பிஜேபி- ஐ பின்னுக்கு தள்ளிய நாம் தமிழர் கட்சி...! கலைகோட்டுதயம் பெருமிதம்

இந்திய அளவில் டிரெண்டிங்ல இருந்த ஆர்கே நகர் இடைதேர்தல் யாரும் எதிர்பாராத அளவிற்கு,ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக சுயேட்சையாக களமிறங்கிய தினகரனை வெற்றி பெற செய்து, ஆளுங்கட்சியையும், எதிர்கட்சியையும் அப்செட் செய்தது

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,தேசிய கட்சியான பாஜக வெறும் 1,417 ஓட்டுகளை மட்டுமே பெற்றது.

யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத “நோட்டோ” 2,373 ஓட்டுகள் பெற்றது.

வெற்றி பெற்ற டிடிவி தினகரன் 89,013 வாக்குகளும்,அதிமுக 48,306 வாக்குகளும், திமுக 24,651 வாக்குகளும்,பெற்று உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த,நாம் தமிழர் கட்சி வேட்பாளர்,”நாங்கள் டெபாசிட் வாங்க வில்லை என்பதை விட, தேசிய கட்சியான பிஜேபி-ஐ விட அதிக வாக்குகள் பெற்று உள்ளோம்.அதே வேளையில் தேர்தல் முடிவுகள் எதுவும் திருப்தியாக இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் முடிவுகள் தனக்கு சாதகமாக இல்லை என்று தெரிந்ததும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், வாக்கு எண்ணும் இடத்திலிருந்து புறப்பட்டு சென்றார்