கரும்பு விவசாயி சின்னம்: உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு!

கரும்பு விவசாயி சின்னம் கோரி, உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு செய்துள்ளது.

Naam tamilar party appeal in supreme court request to allocate sugarcane farmer symbol for its party smp

நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம், தற்போது கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளாது. இதனை எதிர்த்து, கரும்பு விவசாயி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

கரும்பு விவசாயி சின்னத்தை தற்பொழுது பெற்றிருக்கக் கூடிய கட்சி கடந்தாண்டு டிசம்பர் 17ஆம் தேதி கேட்டிருந்தார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி பிப்ரவரி 9ஆம் தேதிதான் கேட்டார்கள். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பிப்ரவரி 13ஆம் தேதி அந்த சின்னத்தை ஒதுக்கியது இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி, பின்னர் எப்படி சின்னத்திற்காக கோரிக்கை வைக்க முடியும்? என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து 6% வாக்குகளை வைத்திருப்பதாக நாம் தமிழர் கட்சி தகவல் தெரிவித்தது.

மேலும், கரும்பு விவசாயி சின்னத்தை வேண்டுமென்றே இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தங்களுக்கு தரவில்லை என நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியது. அதற்கு, வேண்டுமென்றால் தேர்தலில் போட்டியிட்டு போதுமான வாக்கு சதவீதத்தை அடைந்து தேவையான எம்பி எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை அக்கட்சி பெறட்டும். நாங்கள் அவர்களுக்கு அவர்கள் கேட்கும் சின்னத்தை கொடுக்கிறோம் என தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டிப்பு!

கடந்த காலங்களில் கரும்பு விவசாய சின்னத்தில் போட்டியிட்டதாகவும், அதனால் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரியது. ஆனால், இப்படி மனு தாக்கல் செய்து ஒவ்வொருவரும் சின்னத்தை பெற்றார்கள் என்றால் நூற்றுக்கணக்கான கட்சிகள் சின்னம் கோரி நீதிமன்றத்தை நாடுவார்கள் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என தேர்தல் ஆணையம் வாதிட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர் நீதிமன்றம், எந்த உத்தரவையும் பிறக்காமல் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது. கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு வழங்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

இந்த நிலையில், கரும்பு விவசாயி சின்னம் கோரி, உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு செய்துள்ளது. கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு வழங்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அக்கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios