Asianet News TamilAsianet News Tamil

மைசூரு - சென்னை சென்ட்ரல்.. புதிய வந்தே பாரத் சேவைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் - வெளியான நேர அட்டவணை!

New Vande Bharath : மைசூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே இரு மார்க்கமாகவும் புதிய வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Mysuru Chennai MGR Central Indian Railway approved new vande bharath train ans
Author
First Published Mar 11, 2024, 6:02 PM IST | Last Updated Mar 11, 2024, 6:03 PM IST

ஏற்கனவே இந்திய அளவில் 50க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் "சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பத்தூர் வரை", "சென்னை சென்ட்ரல் முதல் விஜயவாடா வரை", "எக்மோர் முதல் திருநெல்வேலி வரை" மற்றும் "கோயம்புத்தூர் முதல் பெங்களூர் கண்டோன்மெண்ட்" வரை வந்தே பார் ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. 

இந்த சூழலில் தற்பொழுது இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி "மைசூர் மற்றும் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்" இடையிலான புதிய வந்தே பாரத் சேவை வருகின்ற மார்ச் 14ஆம் தேதி முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 14ஆம் தேதி துவங்கும் இந்த சேவைகளானது, எதிர்வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை ஒரு நேரத்திலும், (SMVT Bengaluru) அதன் பிறகு ஏப்ரல் 5ஆம் தேதி முதல் புதிய நேரத்திலும் செயல்பட உள்ளது.

(மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5 வரை SMVT பெங்களூரு முதல் சென்னை சென்ட்ரல் வரை அந்த ரயில் சேவைகளை வழங்கும்)

குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் இன்று வெளியீடு? உள்துறை அமைச்சம் வெளியிடும் எனத் தகவல்

தற்பொழுது வெளியாகி உள்ள இந்த புதிய தகவலின்படி வருகின்ற மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் புதன் கிழமைகளை தவிர வண்டி எண் 20663 என்ற வந்தே பார் ரயில் "SMVT பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, கிருஷ்ணாபுரத்திற்கு 8.04 நிமிடங்களுக்கு வந்து சேரும். அதன் பிறகு 10.30 மணியளவில் காட்பாடியை நெருங்கும் அந்த ரயிலானது அன்றைய தினமே மதியம் 12.25 மணிக்கு சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். 

அதேபோல அந்த வந்தே பாரத் ரயில் அன்று மாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு. சுமார் 6.20 மணியளவில் காட்பாடிக்கும், 8.50 மணிக்கு கிருஷ்ணாபுரத்திற்கும், இறுதியாக SMVT பெங்களூரு ரயில் நிலையத்தை இரவு 9.25 மணிக்கு சென்றடையும், வாரந்தோறும் புதன்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் இந்த ரயில் சேவையானது இயக்கப்படும். 

ஏப்ரல் மாதம் 5ம் தேதி முதல் புதிய நேரத்தில் செயல்படும் இந்த ரயில் மைசூரில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு, மாண்டியாவிற்கு 6 மணிக்கும், கேஎஸ்ஆர் பெங்களூருக்கு 7.45 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்திற்கு 8 மணிக்கும், காட்பாடிக்கு 10.30 மணிக்கும், இறுதியாக சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை மதியம் 12:25 மணிக்கு வந்து சேரும். அதேபோல சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் அதே வந்தே பாரத் ரயில் இரவு 11.20க்கு மைசூர்விற்கு சென்றடையும்.

அக்னி 5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி! DRDO விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios