சமூக அக்கறையோடு பல நட்சத்திரங்கள் செய்து வரும் நல்ல பல காரியங்கள் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : ஆளுநரை மாற்றுங்கள்.. தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகியால் பரபரப்பு!
சில தினங்களுக்கு முன்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த துணை நடிகர் பிரபுவிற்கு, அவருடைய இறுதி நாட்களில் பல மருத்துவ உதவிகளை செய்தும். அது பலன் அளிக்காமல் அவர் இறந்த பொழுது அவரின் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்தி, பலரையும் நெகிழச்செய்தார் இமான்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தை அடுத்த கல்பாறைப்பட்டி பகுதியில் வசித்து வரும் அமுதா என்ற மாணவி 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆனால் அண்மையில் ஒரு விபத்தில் அவரது அம்மா, அப்பா மற்றும் அக்கா என்று தனக்கு இருந்த அனைத்து சொந்தங்களையும் இழந்து தற்போது நிராதரவாக நின்று வருகிறார்.
இது குறித்து பல முன்னணி செய்தி நிறுவனங்களில் செய்தி வெளியான நிலையில், இசையமைப்பாளர் இமான் அந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்து, அவருடைய விவரங்களை பகிருமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் ரூ.26 லட்சம் மொய் வசூல்!
