உறைந்துபோன மூணாறு… வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கு கீழ் குறைந்ததால் குளிரில் நடுங்கும் பொதுமக்கள்….

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பல்வேறு இடங்களில் வெப்பம் சைபர் டிகிரிக்கு கீழ் நிலவுவதால் நீர் நிலைகள் உறைந்து போயுள்ளன.

மூணாறில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரி குளிர்காலம் நீடிக்கும். தொடக்கத்தில் குறைந்த அளவே இருக்கும் குளிர் பின்னர் படிப்படியாக அதிகரித்து உச்சநிலையை அடையும். அதாவது டிசம்பர் மற்றும் ஜனவரியில் குளிர் மைனஸ் சைபர் டிகிரியை எட்டும்.

இந்த ஆண்டு குளிர்காலம் தொடங்கியதில் இருந்தே குளிர் சற்று அதிகமாகவே இருந்தது. கடந்த சில நாட்களாகவே 6 டிகிரிக்கு குறைவாகவே இருந்தது.

இந்நநிலையில் மூணாறை அடுத்த சொக்கநாடு மற்றும் லட்சுமி எஸ்டேட் பகுதியில் வெப்பம் ஜீரோ டிகிரிக்கு குறைந்ததால் உறை பனி ஏற்பட்டது. இதனால் குளிர் வாட்டி வதைத்தது.

இதே போன்று கொடைக்கானலிலும் வெப்பம் ஜீரோ டிகிரிக்கு குறைவாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைகளை வருடியபடி செல்லும் மேகக் கூட்டங்கள் அவர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.