Asianet News TamilAsianet News Tamil

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயப்படுத்தப்பட்டதால் அதிக நன்மைகள் ஏற்பட்டுள்ளன - மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமிதம்…

More advantages have been made because of the forced driving license - the motor vehicle analyst boasted ...
More advantages have been made because of the forced driving license - the motor vehicle analyst boasted ...
Author
First Published Sep 27, 2017, 7:35 AM IST


திருவள்ளூர்

குடிகாரர்கள், அதிவேகமாக வண்டி ஓட்டுபவர்களின் அசல் ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு பறிமுதல் செய்யப்படுவதால் அவர்கள் விழிப்புணர்வுடன் வாகனங்களை ஓட்டுகின்றனர். இதுபோன்ற நன்மைகள் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயப்படுத்தப்பட்டதால் நடந்துள்ளான என்று திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ஓய்வுப் பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாதந்திர கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். இதில் வரவு, செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. பின்னர், வளர்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் பேசியது:

“வாகனம் ஓட்டுபவர்கள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். சாலை விதிகளை மீறும்போது தான் விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன.

உடல் ஆரோக்கியத்துடன் உள்ள முதியவர்களும் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறலாம்.

தற்போது, அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளதால் பல்வேறு நன்மைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 18 வயதிற்கு குறைவாக உள்ள இளைஞர்கள் வாகனங்கள் ஓட்ட முடியாது. இதனால் விபத்துகள் குறையத் தொடங்கியுள்ளது.

மது அருந்துபவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களின் அசல் ஓட்டுநர் உரிமம், மூன்று மாதங்களுக்கு பறிமுதல் செய்யப்படுவதால், விழிப்புணர்வுடன் வாகனங்கள் இயக்கப்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வத்திடம் தங்களது சந்தேகங்களை கேட்டு, தெளிவுப் பெற்றனர்.

இந்தக் கூட்டத்தில் 87 உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios