மாதந்தோறும் வேலையற்ற இளைஞர்களுக்கு அரசு உதவி தொகை ..!!

படித்து முடித்து வேலையில்லாத இளைஞர்கள் மாத உதவி தொகை பெற , விண்ணபிக்கலாம் என , திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் படித்து முடித்த வேலை இல்லாத இளைஞர்கள், அரசு உதவி தொகை பெற முடியும் என்பது குறிபிடத்தக்கது.

அரசு உதவி தொகை பெற தகுதி என்ன ?

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ௫ ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்க வேண்டும் அதாவது 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 31 குள் பதிவு செய்திருக்க வேண்டும்.

அதன்படி ,

9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் : ரூ 100

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் : ரூ 150

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் : ரூ 200

 பட்டபடிப்பு முடித்தவர்கள் : ரூ 300

நிபந்தனை :

வயது வரம்பு :

தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் : 45

இதர வகுப்பினர் : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் : ரூ 600

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் : ரூ 750

பட்டபடிப்பு முடித்தவர்கள் : ரூ 1000

குறிப்பு : 10 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும்

விண்ணபிக்க கடைசி தேதி : பிப்ரவரி 28 (வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பம் தர வேண்டும் )