அசால்ட் பண்ணிய குரங்கு... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய டாக்டர்!
சீர்காழி அருகே 20 பேரை கடித்து டிமிக்கி கொடுத்திருந்த குரங்கை கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சீர்காழி அருகே 20 பேரை கடித்து டிமிக்கி கொடுத்திருந்த குரங்கை கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு யாராவது சேட்டை செய்தால் அதை சுருக்கமாக குரங்கு சேட்டை என்று குறிப்பிடுவார்கள். ஆனால் அதையும் தாண்டி கொடூரமாக சேட்டை செய்த குரங்கு ஒன்றால் ஒட்டுமொத்த கிராமமே அஞ்சி நடுங்கி இருந்து வந்தது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சி தென்னலக்குடி கிராமம் கன்னிக்கோயில் தெருவில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த 1 மாதமாக எங்கிருந்தோ வந்த ஒரு ஆண் குரங்கு வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை எடுத்து செல்லத் தொடங்கியது. அதைத் தடுக்க முயன்றவர்களை அக்குரங்கு பார்த்த பார்வை திகிலடையச்செய்தது. மக்கள் பயந்து நடுங்குவதைக் கண்டு அடுத்தடுத்து அசால்ட் பண்ண ஆரம்பித்த அந்தக் குரங்கு முதலில் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து அடுத்து ஆட்களையும் கடித்து வைக்க ஆரம்பித்தது. சுமார் ஒரு மாத கால கடத்துக்குள் 20-க்கும் மேற்பட்டோர் குரங்கிடம் கடி வாங்கினர். வனத்துறையினர் கூண்டு அமைத்து, குரங்கை பிடிக்க முயன்றனர். அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது.
இதனையடுத்து வனத்துறையினர் கூண்டு அமைத்து, குரங்கை பிடிக்க முயன்றனர். அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. மேலும் திருவாரூரில் இருந்து வந்த நிபுணர்கள், வலை மற்றும் சுருக்கு அமைத்து, பிடிக்க முயன்றனர். அவர்களுக்கும், 'டிமிக்கி' கொடுத்து, குரங்கு தப்பியது.
இதையடுத்து ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லுாரி பேராசிரியர் குழுவினர், ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தி, குரங்கை பிடித்தனர். ஒரு வீட்டினுள் புகுந்து மயங்கிய குரங்கை, மருத்துவக் குழுவினர், வலை விரித்து பிடித்து, கூண்டில் அடைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.