தமிழகத்தில் குரங்கு அம்மை வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் குரங்கு அம்மை வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருக்கும் பன்னாட்டு விமானங்களில் குரங்கு அம்மை தாக்கம் உள்ள 63 வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தீவரமாக கண்காணிக்க படுகின்றனர். குரங்கு அம்மை தடுப்பு பணிகள் குறித்து கோவை விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. கோவையில் வெளிநாட்டில் இருந்து இரு விமானங்கள் வருகின்றது. தினமும் 170 பயணிகள் வரை வெளிநாடுளில் இருந்து வருகின்றனர்.எனவே வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் 2 சதவீதம் ரேன்டமாக சோதனை நடத்தப்படுகின்றது. இதுவரை ஓருவக்கு கூட கொரொனா, குரங்கு அம்மை கண்டறியப்பட வில்லை.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 2,316 பேருக்கு கொரோனா… 2,402 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!

மேலும் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் மையம் தயார் நிலையில் உள்ளது. ஒரு படுக்கை அறையும் தயாராக இருக்கிறது. கோவை ,மதுரை ,திருச்சி சென்னை அரசு மருத்துவமனைகளில் பிரத்யோகமாக 10 படுக்கைகளுடன் கூடிய குரங்கு அம்மை வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் நாளை முதல் குரங்கு அம்மை வார்டு செயல்பட துவங்கும். மேலும் ஐசிஎம்ஆர் மூலம் 15 ஆய்வகங்கள் குரங்கு அம்மை கண்டறிய ஒன்றிய அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதில் ஒன்றை தமிழகத்திற்கு கேட்டுள்ளதாகவும். அது வந்தவுடன் கிங் இன்ஸ்டியுட்டில் அமைக்கப்படும்.

இதையும் படிங்க: கேரளாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை... மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி!!

கேரளா தமிழகம் இடையே 13 பாதைகளில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் பணியில் பொது சுகாதாதத்துறையினர் ஈடுபட்டு வருகிறது. குரங்கு அம்மை பாதிப்புகளை ஆட்சியர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் முகம், முழங்கை பகுதிகளில் கொப்புளம் இருந்தால் அவர்களை கண்காணிக்கப்படவேண்டும். கொரொனா பாதிப்பு கூட துவங்கி இருக்கின்றது. முகக்கவசம், சானிடைசர் பயன்பாட்டை அதிகரிக்க அறிவுறுத்தி இருக்கிறது. முதல்தவனை தடுப்பூசி 96 சதவீதமும், இரண்டாவது தவணை 86 சதவீதமும், பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வரும் ஞாயிற்று கிழமை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.