Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை.. மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அப்டேட்..

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Moderate rain for 5 days in Tamil Nadu - Weather Update
Author
First Published Sep 14, 2022, 1:59 PM IST

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

14.09.2022 மற்றும்‌ 15.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

16.09.2022 மற்றும்‌ 17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

18.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:5000 மாணவ, மாணவிகளுக்கு வகுப்பெடுக்கும் காவல்துறை...! 8 இடங்களுக்கு சுற்றுலா..! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

14.09.2022: வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மேலும் படிக்க:பரபரப்பு !! ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பால் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..

Follow Us:
Download App:
  • android
  • ios