Asianet News TamilAsianet News Tamil

பரபரப்பு !! ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பால் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More than 100 children are affected by flu in one day
Author
First Published Sep 14, 2022, 12:54 PM IST

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஒருங்கிணைந்த குழந்தைகள் காப்பக மருத்துவமனையாக திகழ்கிறது. இங்கு 300 க்கும் மேற்பட்ட சிகிச்சை படுக்கைகள் வசதிகள் உள்ளன. இந்நிலையில் இங்கு இன்று ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ப்ளூ காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் ஃப்ளு காய்ச்சல் காரணமாக ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், வார்டுகள் நிரம்பி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவ காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க:பெட்ரோல், டீசல் விலை குறையுமா..? கச்சா எண்ணெய் விலை சரிவு...! மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த வேல்முருகன்

கடந்த 2 ஆண்டுகளாக இந்த பருவ கால ஃப்ளு காயச்சல் தொற்று குறைந்தளவில் காணப்பட்ட நிலையில், தற்போது கொரோனா தொற்று ஓரளவு குறைந்துள்ள நிலையில், குழந்தைகளுக்கு ஃப்ளு காயச்சல் தொற்று அதிகளில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஃப்ளு காய்ச்சலுக்கான தடுப்பூசியை தவறாமல் செலுத்த வேண்டும் என்றும் தொற்று நோய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க:5000 மாணவ, மாணவிகளுக்கு வகுப்பெடுக்கும் காவல்துறை...! 8 இடங்களுக்கு சுற்றுலா..! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios