Asianet News TamilAsianet News Tamil

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு..! எப்போது முடியும்? என்ன சொல்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்?

MLAs disqualified case when will finish
MLAs disqualified case when will finish
Author
First Published Oct 4, 2017, 10:25 AM IST


முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்த ஆதரவை தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் திரும்பப் பெற்றனர். இதுதொடர்பாக எம்.எல்.ஏக்களிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டிருந்தார். எம்.எல்.ஏக்கள் சார்பில் விளக்கம் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. 

இதையடுத்து முதல்வருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்ற 18 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர். 

தங்களின் தகுதிநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு, கடந்த மாதம் 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய விசாரணையின்போது கபில் சிபல், சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடியதால் சென்னை உயர்நீதிமன்ற வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.

தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஒன்றாக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு மாறியது. கடந்த விசாரணையின்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்தை ரத்து செய்ய முடியாது எனவும் இதுதொடர்பாக சபாநாயகர், ஆளுநர், அரசு கொறடா ஆகியோர் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

அந்தவகையில், வழக்கு இன்று விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் போக்கு எப்படி இருக்கும்? வழக்கின் விசாரணை எப்போது முடியும்? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

இந்த வழக்கு சட்ட வல்லுநர்களும் மூத்த வழக்கறிஞர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

காலம் தாழ்த்தாமல் இந்த வழக்கை விசாரித்தால் கூட டிசம்பர் மாதத்தில் தான் விசாரணை முடியும். ஒருதரப்பு வாதத்தையோ கருத்தையோ மட்டும் வைத்தே விசாரிக்க முடியாது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தரப்பு, சபாநாயகர் தரப்பு ஆகிய இரு தரப்பு வாதங்களையும் விளக்கங்களையும் கேட்டு ஆராய்ந்த பின்னரே தீர்ப்பு வழங்கப்படும். அந்த வகையில், காலம் தாழ்த்தாமல் இந்த வழக்கை விசாரித்தால்கூட விசாரணை முடிவதற்கு டிசம்பவர் ஆகிவிடும்.

இவ்வாறு மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios