நெற்கட்டும் செவலில் பூலித்தேவன் பிறந்தநாளில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ. கருணாசுக்கு சொந்தமான கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பூலித்தேவன் பிறந்த நாள் விழா, நெல்லை மாவட்டம், நெற்கட்டு சேவலில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு, பூலித்தேவன் சிலைக்கு மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், திருவாடனை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கருணாஸ், பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, நெற்கட்டு சேவலுக்கு வருகை புரிந்தார்.

நெற்கட்டு சேவல் அருகே வந்த கருணாசுக்கு சொந்தமான 2 கார்கள் மீது மர்ம நபர்கள் கற்களைக் கொண்டு தாக்கினர். இதில், கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. 

எம்.எல்.ஏ. கருணாஸ் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எம்.எல்.ஏ. கருணாசின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.