திமுகவில் யாருக்கு எந்தத் தொகுதி? வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திமுக வேட்பாளர் பட்டியலை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேட்பாளர் பட்டியலுடன் திமுகவின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MK Stalin to announce DMK Candidate list and manifesto for Lok Sabha Election 2024 tomorrow sgb

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிட இருக்கிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக 21 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தங்களும் நிறைவடைந்துள்ளன. காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர் பட்டியல் மட்டுமே இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேட்பாளர் பட்டியலுடன் திமுகவின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி வந்து புலம்பும் மோடி... தகுதிக்கு ஏற்ப பேசுகிறாரா?: பதிலடி கொடுத்த டி.ஆர்.பாலு!

MK Stalin to announce DMK Candidate list and manifesto for Lok Sabha Election 2024 tomorrow sgb

முன்னதாக, திமுக போட்டியிடும் தொகுதிகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தென்காசி, பெரம்பலூர், தூத்துக்குடி, தேனி ஆகிய 21 மக்களவைத் தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

7 கட்டங்களாக நடக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை (மார்ச் 20ஆம் தேதி) தொடங்குகிறது. மார்ச் 27ஆம் தேதி முடிகிறது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28ஆம் தேதி முதல் நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30ஆம் தேதி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி பதிவு செய்யப்படும் வாக்குகள் ஒன்றரை மாதம் கழித்து ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஒரே ஆர்டரில் 4,000 எலக்ட்ரிக் கார் சேல்ஸ்! சிட்ரான் EV பல்க் பர்சேஸ் பண்ணும் ப்ளூஸ்மார்ட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios