மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயமில்லை என தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறிய நிலையில் இதை வைத்து மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
MK Stalin questioned central government over Hindi imposition: மத்திய அரசு கொன்டு வந்துள்ள தேசிய கல்விக்கொள்கையில் 3வது மொழியாக இந்தியை படிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காத நிலையில், பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய கல்விக்கொள்கை அமலாக உள்ளது. இதனால் அந்த மாநில அரசு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக்கியது. இதற்கு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மகாராஷ்டிராவில் இந்திக்கு கடும் எதிர்ப்பு
மேலும் அந்த மாநில மொழி ஆலோசனைக் குழு, இந்தி கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் மராத்தி, ஆங்கிலத்துடன் 3ஆவது மொழியாக இந்தியை சேர்ப்பது மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தது. கடும் எதிர்ப்பு எழுந்ததால் இதுகுறித்து விளக்கம் அளித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ''மகாராஷ்டிராவில் இந்தி மொழி கட்டாயம் இல்லை. மராத்தி மொழி கட்டாயம். இந்தியை மாற்று மொழியாக பயன்படுத்தலாம்'' என்றார்.
இந்நிலையில், பாஜக ஆளும் முதல்வரே இந்தி மொழியை கட்டாயம் இல்லை என அறிவித்துள்ளதால் 3வது மொழி குறித்த அறிவிப்பு குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நான் தான் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர்.! திமுக அரசுக்கு எதிராக அடித்து ஆடும் ஆர்.என். ரவி
பொதுமக்கள் கண்டனத்தின் வெளிப்பாடு
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''இந்தியை 3வது மொழியாக திணிக்க முயன்ற மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கடும் எதிர்ப்பால் இப்போது தற்போது மாநிலத்தில் மராத்தி மட்டுமே கட்டாயம் என்று அவர் கூறுகிறார். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக பொதுமக்கள் கண்டனத்தின் வெளிப்பாடு தான் இது.
அடுக்கடுக்கான கேள்வி
ஆகவே மாண்புமிகு பிரதமரும் மத்திய கல்வி அமைச்சரும் கீழ்க்காணும் விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும்:
* தேசிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற தேவேந்திர ஃபட்னாவிஸின் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா?
* அப்படியானால், தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதிப்படுத்தும் தெளிவான உத்தரவை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்குமா?
* கட்டாய மூன்றாவது மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழகத்திற்கு நியாயமற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவை நம்பி மட்டுமே விசிக இல்லை.! கூட்டணிக்குள் பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்
