அப்பவே காந்தி சொன்னார்... வெள்ள நிவாரணப் பணிகளில் உதவிய மக்களுக்கு முதல்வர் பாராட்டு
மற்றவர்களின் சேவையில் உங்களைத் தொலைப்பதுதான் உங்களை நீங்களே கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி என்று மகாத்மாக காந்தி கூறியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
நேசக்கரம் நீட்டி நிவாரணப் பணிகளுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்ட கிராம மக்களுக்கு உதவிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நேசக்கரம் நீட்டி நிவாரணப் பணிகளுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு இரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின் அன்பும் தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் சொன்னதை நினைவுபடுத்துகிறது என்று கூறியிருக்கிறார்.
"மற்றவர்களின் சேவையில் உங்களைத் தொலைப்பதுதான் உங்களை நீங்களே கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி" என்ற மகாத்மாக காந்தியின் மேற்கோளையும் முதல்வர் ஸ்டாலின் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் திடீர் கைது
"அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும்!" என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு அனுப்பப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்களுக்காக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். "கேரள சகோதரர்களின் அன்புக்கு நன்றி" என்று மலையாளத்தில் நன்றி கூறியிருக்கிறார்.
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் பாதிப்படைந்த சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இரவுபகலாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தது நினைவூட்டத்தக்கது.
சமையல் சேனல் நடத்திக்கொண்டே கேட் தேர்வில் சாதனை படைத்த உணவு இளைஞர்!