சாலையில் பள்ளமா? போனை எடுத்து போட்டோ எடுங்க.. 24 மணி நேரத்தில் சரிசெய்யப்படும்! எப்படி தெரியுமா?
நெடுஞ்சாலைத்துறையினால் பராமரிக்கப்படும் சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் கைபேசி செயலி வாயிலாக, புவி குறியீட்டுடன் கூடிய புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் கைபேசி செயலியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், பள்ளங்களற்ற சாலை என்ற இலக்கை அடைய சாலையில் ஏற்படும் பள்ளங்களை பொது மக்களின் துணையோடு கண்டறிந்து, குறித்த காலத்தில் செப்பனிடும் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட இணையத்தின் அடிப்படையிலான “நம்ம சாலை“ என்ற புதிய மென்பொருள் மற்றும் கைபேசி செயலியை தொடங்கி வைத்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியான சாலை உள்கட்டமைப்பு அவசியம். கிராமப்புற பொருளாதாரத்தினை மேம்படுத்திடவும், புதிய வாழ்வாதார வாய்ப்புகளைத் உருவாக்கவும், சந்தைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை அணுகுவதை எளிதாக்குவதில் சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை, உருவாக்கி, பராமரித்து வருகிறது. தமிழ்நாடு “விபத்தில்லா மாநிலம்“ என்ற முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டத்தினை செயல்படுத்த, “பள்ளங்களற்ற சாலை” என்ற இலக்கினை அடைவற்கு ஏதுவாக, பொதுமக்களின் துணையோடு கண்டறியப்படும் சாலையில் ஏற்படும் பள்ளங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரிசெய்யப்பட வேண்டும் என்பதால், 2023-24 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது, பிரத்தேயக கைபேசி செயலி உருவாக்கப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில், இணையத்தின் அடிப்படையிலான “நம்ம சாலை“ என்ற மென்பொருள் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்பட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- நீ என்ன சாதி! பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்து தாக்குதல்! 6 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்.!
இச்செயலியின் மூலம், நெடுஞ்சாலைத்துறையினால் பராமரிக்கப்படும் சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் கைபேசி செயலி வாயிலாக, புவி குறியீட்டுடன் கூடிய புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் அச்சாலைக்குரிய பொறியாளருக்கு செயலி வாயிலாக தெரிவிக்கப்பட்டு, குறித்த காலக்கெடுவுக்குள் பள்ளங்களை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு, சரி செய்யப்பட்ட விவரம், சாலையின் புகைப்படங்களுடன், “நம்ம சாலை“ செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, புகார் அளிக்கும் பொதுமக்களின் அலைபேசிக்கு அனுப்பப்படும். அதன்படி சாலையில் ஏற்படும் பள்ளங்கள் உடனுக்குடன் சீர் செய்யப்படுவது மட்டுமல்லாமல், தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்படும். இச்செயலி மூலம் பள்ளங்கள் குறித்து தெரிவிப்பதுடன் மட்டுமில்லாமல், பேரிடர் காலங்களில் மரம் விழுதல், வெள்ளப்பெருக்கு போன்றவற்றைக் குறித்தும் புகார்கள் அளிக்க ஏதுவாக இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- இனி பைக்கில் வேகமாக சென்றால் ஆப்பு தான்.. சென்னையில் அமலுக்கு வரும் புதிய விதி! மீறினால் என்னவாகும் தெரியுமா?
2023-24 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட, அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு நெருக்கமான பயனர் குழு (CUG) முறையில் நிரந்தர அலைபேசி எண் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் உள்ள 45 கோட்ட பொறியாளர்கள், 192 உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் 274 உதவி பொறியாளர்களுக்கும் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் “நிரந்தர தொலைபேசி எண்“ வழங்கப்பட்டது.