ரூ.1,330 கோடியில் 7,724 வீடுகள்: அமைச்சர் தாமோ அன்பரசன் தகவல்!

தமிழக அரசின் மறுகட்டுமான திட்டத்தில் 21 இடங்களில் ரூ.1330 கோடியில் 7,724 வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார்

Minister tm anbarasan said that 7724 houses will be build under TN Govt reconstruction project  smp

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தாமோ அன்பரசன் தலைமையில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் தாமோ அன்பரசன் பேசியதாவது: “வாரியத்தின் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரம் புதிய வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 30 திட்டப் பகுதிகளில் 7,582 வீடுகள் இடிக்கப்பட்டு ரூ.1,627.88 கோடியில் 9,522 வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டது.

புழல் சிறையில் 120 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை: ஜாமீன் மனுவில் அமர்பிரசாத் ரெட்டி தகவல்!

இதில் 21 திட்டப்பகுதிகளில் ரூ.1,330.43 கோடியில் 7,724 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 திட்டப்பகுதிகளில் 297.45 கோடியில் 1,798 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் பல்வேறு மாவட்டங்களில் 6 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.950 கோடியில் திட்டமிடப்பட்டது.

இதில், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் திட்டப்பகுதியில் ரூ.149.32 கோடியில் 969 குடியிருப்புகளு ம், சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் திட்டப்பகுதியில் ரூ.130.23 கோடியில் 900 குடியிருப்புகளும், திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பகுதி திட்டப்பகுதியில் ரூ.139.80 கோடியில் 876 குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகிறது.

மாவட்டங்களில் திறந்து வைக்கப்பட்ட திட்டப்பகுதிகளில் காலியாக உள்ள வீடுகளை உடனடியாக நிரப்ப வேண்டும். “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடியிருப்பு நலச் சங்கங்கள் மூலம் குடியிருப்பு திட்டப் பகுதியை தூய்மையாக பராமரிக்க வேண்டும். புதியதாக நியமிக்கப்பட்ட வரி வசூலாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களை கொண்டு தவணைத் தொகையை விரைவாக வசூலிக்க வேண்டும். 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்ட திட்டப்பகுதிகளை அடுத்த மூன்று மாதங்களில் முடித்து ஏழை எளிய மக்களுக்கு விரைந்து ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்புதாரர்கள் தாங்கள் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த வலியுறுத்தி மனை மற்றும் குடியிருப்புக்கான கிரைய பத்திரங்களை வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios