அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு கூட்டம்... விதிமுறைகளை சிறப்பாக செயல்படுத்த அறிவுத்தல்!!
மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கியுள்ளார்.
மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கியுள்ளார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு அறிவுரைகள் அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் நண்பகல் 12.00 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10.00 மணிக்கு மூடப்பட வேண்டும் இதில் எந்தவித விதிமீறல்கள் இருக்ககூடாது தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் பழனிசாமி முதல்வராக வருவார் - எஸ்.பி. வேலுமணி பேச்சு
அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும், அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்கப்பட வேண்டும். மாவட்ட மேலாளர்கள் அனைவரும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களின் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாக தெரியும்படி மதுபானக் கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும். இதனை அனைத்து மாவட்ட மேலாளர்களும் உறுதி செய்ய வேண்டும். முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல அளவிலான பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் மாவட்டங்களில் மாவட்ட மேலாளர்கள் தத்தம் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: முன்னாடியே ரெய்டு நடத்தியிருந்தால் கள்ளச்சாராய மரணங்களை தடுத்திருக்கலாம் - செல்லூர் ராஜூ
அவ்வாறு சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் ஏதேனும் செயல்படும்பட்சத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாரயம், போலி மதுபானங்கள் விற்கப்படுவதை கண்டறியவும் மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை கண்டறிந்து, காவல்துறைக்குத் தெரிவித்து, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மேலாளர்கள் தினம்தோறும் எந்தவொரு மாவட்டத்திலும் மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும், அப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அனைத்து விதிமுறைகளையும் செவ்வனே செயல்படுத்தி சிறப்பாகச் செயல்பட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.