பாமக-திமுக வாக்குவாதம்.! சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு எடுத்தால் நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பு- ரகுபதி

மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப்பே செல்லும் என தெரிவித்த அமைச்சர் ரகுபதி, அதனால் தான் மத்திய அரசை மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகிறோம் என கூறினார்.  ஜாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசு தனியாக எடுத்தால் நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். 

Minister Raghupathi has said that there is a possibility that the court will ban the caste wise census if the state government takes it KAK

சாதிவாரி கணக்கெடுப்பு - பாஜக ஆதரவு

சட்டப்படி மத்திய அரசுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும் என்றும், சில புள்ளி விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது என்பதால், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் இன்று கொண்டு வத்த தனித்தீர்மானத்தில் தெரிவித்தார்ழ இதடை தொடர்ந்து தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினர். பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கூறுகையில்,  அரசியலமைப்புச் சட்டம் 208(3) அ - வின்படி மாநில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாது என முதல்வர் கூறியுள்ளர். 

Minister Raghupathi has said that there is a possibility that the court will ban the caste wise census if the state government takes it KAK

பறையர் ஒரு பிரிவாக்கனும்

பிகாரில் மாநில அரசு நடத்திய இட ஒதுக்கீட்டை நீதிமன்றம்  தடை செய்ய காரணம் அங்கு கணக்கெடுப்பில் குளறுபடி , தவறு இருந்தது தான்.2012 ல் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மாநில அரசுதான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறினார். முதல்வரின் தீர்மானத்தை பாஜக ஆதரிக்கிறோம் ஆனால் மாநில அரசே எந்த குளறுபடியும் இன்றி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  

இதனையடுத்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் பேசும்போது,  பறையர் சமூகத்தினர் 24 சதவீதம் உள்ளனர். பறையர் சமூகத்தினர் பறையர் , ஆதிதிராவிடர் என்று இருவேறு பிரிவுபோல் பதிவு செய்யப்படுகின்றனர். அவர்கள் அனைவரையும் பறையர் என சேர்த்து பதிவு செய்ய வேண்டும். முதல்வரின் தனி தீர்மானத்தை விசிக ஆதரிக்கிறது என்றார்.

Minister Raghupathi has said that there is a possibility that the court will ban the caste wise census if the state government takes it KAK

பாமக- திமுக வாக்குவாதம்

பாமக எம்.எல்.ஏ அருள் பேசும் போது, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று கூறி தமிழக அரசு காலம் தாழ்த்துவது தவறு, ஊராட்சிகளே கூட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடப்பை நடத்த அதிகாரம் உண்டு. பீகாரில் இட ஒதுக்கீட்டு அளவை அதிகப்படுத்தியதில்தான் தவறு இருந்ததாக நீதிமன்றம் கூறியது, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது தவறு என்று நீதிமன்றம் கூறவில்லை.  ஆனால் இங்கு அவையில் பீகார் நீதிமன்றம் தடை விதித்தது என்று தவறாக பதிவு செய்யப்படுகிறது.

சபாநாயகர் அப்பாவு குறுக்கீடு - அருள்...பிகார் அரசு நடத்தியது சர்வே , தேர்தலுக்கு பிறகு கருத்துக் கணிப்பு நடத்துவது போல , அது மக்கள் தொகை கணக்கெடுப்பு அல்ல...மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு அரசு எடுக்கும் நடவடிக்கையைப் போன்றது. பிகாரில் நடந்தது சர்வேதான் , மக்கள்தொகை கணக்கெடுப்பு அல்ல என்றார்.இதற்கு பாமக உறுப்பினர் அருள் பேரவைத் தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

Minister Raghupathi has said that there is a possibility that the court will ban the caste wise census if the state government takes it KAK

நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பு

அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்ற தந்த தீர்ப்பில் அந்த சமுதாயத்தை சார்ந்த கல்வி ,வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு , ஆகிய தரவுகளை ஆராய்ந்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றது தீர்ப்பின் அடிப்படையில் நீதுபதி பாரதிதாசன் கமிஷனுக்கு,கல்வி, வேலை வாய்பபு போன்ற தரவுகளை  அரசிடம் இருந்து வழங்கப்பட்டு விட்டது. ஆனால் பொருளாதார மேம்பாடு குறித்து சாதி வாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் புள்ளி விவரம் தரமுடியும். சாதி வாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எடுக்க வேண்டும்..எனவே 2021 எடுக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்து, அதோடு சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்

2008 சட்டத்தின் படி மாநில அரசு கணக்கெடுப்பு எடுக்கலாம் என்று  சொன்னாலும் இதை மத்திய அரசு திருத்தி எழுதும் அதிகாரம் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு உண்டு. மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப்பே செல்லும், அதனால் தான் மத்திய அரசை வலியுறுத்துகிறோம் ஜாதிவாரி  கணக்கெடுப்பு மாநில அரசு எடுத்தால் நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது என்றார். இந்த விவாத்த்திற்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திடுக.. மத்திய அரசுக்கு அழுத்தம்- சட்டசபையில் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றம்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios